இந்தியா -
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்
பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை
தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்திருந்தது. வார்னர் 23 ரன்னுடனும், ரென்ஷா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து
விளையாடிய வார்னர் 33 ரன்கள் எடுத்த
நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கேப்டன் ஸ்மித் 8 ரன்கள் எடுத்த
நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்து
ஷேன் மார்ஷ் ரென்ஷாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும்
அரைசதம் அடித்தனர். ரென்ஷா 60 ரன்கள் எடுத்த
நிலையிலும், ஷேன் மார்ஷ் 66
ரன்கள் எடுத்த நிலையிலும்
ஆட்டம் இழந்தனர்.
தற்போது வரை
ஆஸ்திரேலியா 48 ரன்கள் முன்னிலை
பெற்றுள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளன. அந்த அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் இந்திய
டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Post a Comment