சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக  உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி தங்களது உடல்எடையை அதிகரித்து வருகின்றனர். அதே நேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை  உள்ளிட்டவற்றிக்கும் பயிற்சி எடுத்து வருகின்றனர். கடம்பன் படத்திற்காக 90 கிலோ வரை உடல் எடையை கூட்டியிருந்த ஆர்யா  `சங்கமித்ரா'வுக்காக உடல் எடையை மேலும் அதிகரித்து வருகிறார்.

இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து  வருகிறதாம். ரஜினிக்கு ஜோடியாக `கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே, `லிங்கா' படத்தில் நடித்த சோனாக்‌ஷி  சின்ஹாவை `சங்கமித்ரா' படத்தில் ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க  உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி' பட புகழ் சுதீப் சட்டர்ஜி  இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

Post a Comment

 
Top