‘வாலு’ படத்தை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் புதிய
படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக சாய்பல்லவி
நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் இந்த படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக
விலகினார்.
இப்போது இந்த
படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு சில தினங்களில் நடைபெற உள்ளது. முதன்முதலாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து
இருப்பது குறித்து தமன்னாவிடம் கேட்ட போது...
“முதன் முதலாக
விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை நினைத்தால் ‘திரில்’ஆக இருக்கிறது. இதில் என் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலையும் இப்போது
தெரிவிக்கமுடியாது.
இது அருமையான
கதை. இயக்குனர் விஜய் சந்தர் கதையை என்னிடம் சொன்னதும் நான் மிகவும் ‘இம்பிரஸ்’ ஆகி விட்டேன். மார்ச் மாதம் முதல் இதன்
படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்” என்றார்.
இந்த படத்தில்
போஜ்புரி நடிகர் ரவிகிஷன் தமிழ்பட வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

Post a Comment