அதிமுகவின்
விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஓ.
பன்னீர்செல்வம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
பன்னீர்செல்வம் அணியில் இடம் பெற்றுள்ள மைத்ரேயன் உள்ளிட்ட சுமார் 11 அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்
ஆணையத்தில் இது குறித்த புகாரை அளித்திருந்தனர்.
இந்நிலையில்
ஓ.பி.எஸ் தரப்பு குற்றச்சாட்டுக்கு வரும் 28ந்தேதிக்குள் பதில் தர சசிகலாவுக்கு தேர்தல்
ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிலளிக்க தவறினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு இரட்டை
இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா பதில் அளிக்க கோரும் தேர்தல் ஆணையத்தின்
நோட்டீஸ் பெங்களூரு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment