தேனி
மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்... அதன் மண்சார்ந்த மனிதர்களின்
வாழ்க்கையுமாக உருவாகும் படம் `படைவீரன்'. பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ்
முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை தனா என்ற
புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கின்றார். இவர்களுடன் `கல்லூரி' அகில், கலையரசன், இயக்குநர் விஜய்பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, `தெய்வம் தந்த வீடு' நிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
`கடல்', `ஓ காதல் கண்மணி' படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக
பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம்
இயக்குனராக அறிமுகமாகிறார். ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை
மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைக்கிறார்.
இறுதிக்கட்ட
பணிகளில் இருக்கும் `படைவீரன்'
படத்தின் முதல் பார்வை
போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி இன்று வெளியிட்டார். இவோக் தயாரிப்பு நிறுவனம்
சார்பில் மதிவாணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

Post a Comment