தமிழக ஆளுநர்
வித்யாசாகர் ராவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் மாலை 5
மணியளில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கினர்.
ஆளுநரை சந்தித்த
பின்னர் தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், “நல்லதே நடக்கும் என்றும் தர்மம் உறுதியாக வெல்லும் என்றும் கூறினார்.
இதனையடுத்து, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம்
ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம்
விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநர்
சந்திப்புக்கு பிறகு என்ன செய்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை
செய்யப்பட்டது.

Post a Comment