சிபி சத்யராஜ்
நடிப்பில் `கட்டப்பாவ காணோம்' படம் திரையில் ரிலீசாக தயாராகி உள்ள நிலையில், சிபிராஜின்
அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
`சைத்தான்' புகழ் இயக்குநர்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ள இப்படத்தை சத்யராஜ் அவரது தயாரிப்பு
நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி
மூலம் தயாரித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தெலுங்கில்
`ஷனம்' என்ற பெயரில்
ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான `சத்யா' படத்தின்
தலைப்பை சிபிராஜ் படக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு மற்றும் போஸ்டரையும் படக்குழு
வெளியிட்டது.
இறுதிகட்ட
படப்படிப்பில் இருக்கும் `சத்யா' படத்தில்
சிபிராஜுடன் இணைந்து ரம்யா நம்பீசன், வரலட்சுமி
சரத்குமார், யோகி பாபு, சதீஷ், ஆனந்தராஜ்
உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர்.
Post a Comment