தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடிஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இதில் வேலையில்லா பட்டதாரிபடத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரிபடத்தின் இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்கவுள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கொடிபடத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.


இப்படியாக விஐபி-2’, ‘மாரி-2’, ‘கொடி-2’ என்று மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top