ஐ.பி.எல்.
ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனை 3 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
வாங்கியுள்ளது.
பத்தாவது
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்
போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில்
நடக்கிறது. இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய
வீரர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அவ்வகையில்,
தமிழக வீரர் டி.நடராஜனை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய்க்கு
ஏலம் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில்
இருந்து 30 மடங்கு அதிக
தொகைக்கு அவர் தற்போது வாங்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல் கவுதம்,
அனிகெட் சவுத்ரி, கரன் சர்மா, டைமல் மில்ஸ் போன்ற வீரர்களும் அடிப்படை விலையை
விட பல மடங்கு அதிகமாக ஏலம் போனது குறிப்படத்தக்கது.

Post a Comment