மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள்’. இந்த  படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் இதில்  நாயகி, நாயகனை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடம்.

இந்த கதையை பிரணிதாவிடம் சொன்னவுடன், ‘இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர் பார்த்தேன்என்று கூறி  மகிழ்ச்சியுடன் நடித்து இருக்கிறார். நடிப்பு சிறப்பாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


எப்படியோ சகுனிபடத்துப்பிறகு இதில் மீண்டும் தமிழ் பட நாயகியாகி இருக்கிறார். இதுதவிர ஜெமினி கணேசனும்  சுருளிராஜனும்படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.

Post a Comment

 
Top