See More





காமெடிக்கு பெயர் பெற்ற இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி அடுத்ததாக வரலாற்றுக் கதையொன்றை இயக்கவிருக்கிறார். 'சங்கமித்ரா' என பெயர் சூடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகர்களாக ஆர்யா-ஜெயம் ரவி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக இருவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளனர்.


இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பினை நடத்திட சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கான நாயகி தேர்வில் படக்குழு தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Post a Comment

 
Top