எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் புதிய படம் சத்ரியன்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், சரத் லோகித் சவா, நரேன், அருள்தாஸ், ஐஸ்வர்யா தத்தா, கவின் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, தியாகராஜன், இயக்குனர் அமீர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


அப்போது அமீர் பேசும்போது, என்னுடைய முதல் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமல் இவர்கள் மூன்று பேரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால், அதை நான் நிராகரித்து விட்டேன்.

Post a Comment

 
Top