'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஏகே 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.


இந்நிலையில் 'ஏகே 57' படத்தின் பர்ஸ்ட் லுக்கை குடியரசு தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பொங்கலுக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top