பிப்ரவரி 1ம் தேதி முதல் நடப்புக் கண்க்கில் இருந்து ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.மேலும்  சேமிப்புக்கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தற்போதைய நிலையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை அவர்களே விதித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

 
Top