இந்திய தொலைதொடர்பு சந்தையில் புதிய அன்லிமிட்டெட் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகளை எதிர்கொள்ளும் வகையிலும், மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியளிக்கும் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என்பதையும் இத்திட்டங்களின் மூலம் ஏர்டெல் நிரூபித்துள்ளது.

முன்னதாக பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இரு திட்டங்களை அறிவித்த ஏர்டெல், இம்முறை போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இவை நாடு முழுக்க இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அறிவித்திருக்கும் புத்தாண்டு சலுகையை எதிர்கொள்ளும் நோக்கில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் விலை ரூ.549 மற்றும் ரூ.799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்புகள், 4G டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

ரூ.549 இன்ஃபினிட்டி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 4G ஸ்மார்ட்போன் இல்லாதோருக்கு 1GB டேட்டாவும், 4G ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 3GB அளவு டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இத்துடன் ஏர்டெலின் வின்க் மியூசிக் மற்றும் மூவி சேவைகளை பயன்படுத்த முடியும்.

ரூ.799 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இந்தியா முழுக்க வழங்கப்படுகின்றது. இத்துடன் 4G ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கு 3G டேட்டாவும், 4G ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 5GB அளவு டேட்டாவும் வழங்கப்படுகின்றது. ரூ.549 திட்டத்தில் வழங்கப்படுவதை போல் ஏர்டெல் வின்க் மியூசிக் மற்றும் மூவி சேவைகளை பயன்படுத்த முடியும்.


Post a Comment

 
Top