'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும்  'போகன்' டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிருதன் புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' மற்றும் ஏ.எல்.விஜய்யின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவியின் பட தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'வன மகன்' என்று பெயரிட்டுள்ளனர்.


இப்படத்தின் கதை காடுகள் பின்னணியிலானது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதி செய்வதுபோல படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. 'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார்.

Post a Comment

 
Top