இந்தியக் கடலோரக்
காவல் படையில் இளமைத் துடிப்பும், சவால்களைச்
சந்திக்கும் ஆர்வமும் கொண்ட இளம் பட்டதாரிகள் உதவி கமாண்டன்ட் ஆகலாம். இதில்
பொதுப்பணி, பைலட், தொழில்நுட்பப் பணி (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்), சட்டப்பணி என 4 விதமான பிரிவுகள் உள்ளன. தற்போது இந்த நான்கு
பிரிவுகளிலும் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நேரடியாக நிரப்பக் கடலோரக் காவல் படை
அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பதவிக்குத்
தேவையான தகுதி
பொதுப் பணியில்
சேர ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.
அதோடு பிளஸ் டூவிலும் 60 சதவீத
மதிப்பெண்ணுடன் கணிதம், இயற்பியல்
பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும், 1.7.1992-க்கும் 30.6.1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க
வேண்டும்.
தொழில்நுட்பப்
பணியைப் பொறுத்தவரையில் பொறியியல் பட்டம் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ், புரொடக் ஷன், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதலான பாடங்கள்)
அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்
பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பொதுப்பணிக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளதே
வயது வரம்பு இதற்கும் பொருந்தும்.
சட்டப் பணிக்கு
பி.எல். பட்டம் தேவை. 60 சதவீத
மதிப்பெண்ணும் அவசியம். விண்ணப்பதாரர் 1.7.1987-க்கும் 30.6.1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க
வேண்டும்.
தேசிய விளையாட்டு
வீரரா?
பட்டப் படிப்பு
மதிப்பெண் தகுதியில் எஸ்.சி., எஸ்.டி.
வகுப்பினர், என்சிசி ‘சி’ சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், தேசிய அளவில்
சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மட்டும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. மேலும்,
மத்திய அரசின்
இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வு
அளிக்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை
தகுதியான நபர்கள்
உளவியல் தேர்வு, குழு விவாதம்,
நேர்முகத் தேர்வு,
மருத்துவத் தேர்வு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள்
இந்திய கடலோர காவல்படையின் இணையதளத்தை (www.joinindiancoastguard.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டப்
பணிக்கு மட்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 18-ம் தேதி ஆகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை
கடலோர காவல்படையின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
இறுதி தேர்வில்
வெற்றிபெறுவோர் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு நேரடியாக உதவி கமாண்டன்ட் பதவியில்
அமர்த்தப்படுவர். அப்போது சம்பளம் ரூ.56 ஆயிரக்கு மேல் கிடைக்கும். அதோடு பல்வேறு அலவன்ஸ்களும் சலுகைகளும் உண்டு.
உதவி கமாண்டன்ட் பணியைத் தொடர்ந்து துணை கமாண்டன்ட், கமாண்டன்ட், டிஐஜி, ஐஜி, கூடுதல் டைரக்டர்
ஜெனரல், டைரக்டர் ஜெனரல்
என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

Post a Comment