மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ். நந்த கோபால் தயாரிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் கத்திசண்டை’. விஷால்- தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் வடிவேலு நடித்திருக்கிறார். அவருடன் சூரியும் இணைந்துள்ளார்.

கதை, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள சுராஜ் படம் பற்றி கூறும் போது "இந்த படத்தை ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளோம். 50 சதவீதம் காமெடி 50 சதவீதம் ஆக்‌ஷன் என இரண்டும் கலந்த கலவையாக கத்தி சண்டை இருக்கும். இதுவரை ஆக்‌ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்‌ஷனிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.


குறிப்பாக வடிவேலும், சூரியும் காமெடியில் பின்னி இருக்கிறார்கள். 'தலைநகரம்', 'மருதமலை' படங்களுக்கு பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைக் காண முடிகிறது

Post a Comment

 
Top