‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும்
அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை
தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த
அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக
பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று
கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்தும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.

Post a Comment