இன்டஸ்ட்ரியல்
டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஐ.டி.பி.ஐ., வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. நவீன சேவைகளுக்குப் பெயர் பெற்ற
இந்த வங்கியில் எக்சிகியூடிவ் பிரிவில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்புவதற்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளன.
வயது: ஐ.டி.பி.ஐ.,யின் எக்சிகியூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2016 அடிப்படையில் 25
வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.அதாவது விண்ணப்பதாரர்கள் 02.10.1991க்கு
பின்னரும், 01.10.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம்
60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, மருத்துவப்
பரிசோதனை, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும்
முறை: இந்த வங்கியின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க
வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 700 ரூபாய். கட்டணத்தை ஆன்-லைன் முறையில் டெபிட்
கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஐ.எம்.பி.எஸ்., மொபைல் வேலட், கேஷ் கார்டு ஆகிய
ஏதாவது ஒரு முறையில் செலுத்த வேண்டும்.
கடைசி நாள்: 2016
நவ., 30.
விபரங்களுக்கு: www.idibi.com

Post a Comment