ரஜினி நடிப்பில்
பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின்
பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள
யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி
நடைபெறும் அரங்கத்தின் உள்ளே சுற்றிலும் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு, அதில் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரையிடப்பட்டன.
இவ்விழாவில்,
ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ்
திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி,
எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்துகொண்டனர்.



Post a Comment