அஜய் ஞானமுத்து
இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா
நடிக்கவிருக்கும் புதிய படம் 'இமைக்கா நொடிகள்'.
தொடர் ஹிட்களைக் கொடுத்து
வரும் நயன்தாரா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இதனால் 'இமைக்கா நொடிகள்' படத்திற்கு படப்பிடிப்பிற்கு முன்பே ஒரு
மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லனாக இயக்குனர் அனுராக் காஷ்யப்பை
படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக
அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைக்கிறார்.
ஹிப்ஹாப் ஆதி
இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்
சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கிறார். விரைவில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு
தொடங்கவுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment