சவாலான கதையம்சம்
உள்ள படமாக ‘ரெமோ’ தயாராகி உள்ளது. இதில் பெண் வேடத்தில் நடித்து
இருக்கிறேன். டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் கதை சொன்னபோது பெண் வேடம் சரியாக வருமா?
என்ற சந்தேகம் இருந்தது.
இந்த
கதாபாத்திரம் பெண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. ‘மேக்கப்’ கலைஞர்களை வைத்து எனக்கு பெண் வேடம்
போட்டுப்பார்த்தனர். தலைமுடி, உடல் தோற்றத்தை
மாற்றுவது என்று பல தடவை முயற்சி செய்து பிறகு நர்சு கதாபாத்திரம் சிறப்பாக
உருவாக்கப்பட்டது. படப்பிடிப்பில் என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் என்னை பார்த்து கைநீட்டி அந்த கதாநாயகியின் பெயர்
என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு அனுஷ்காவின் தங்கை என்று படக்குழுவினர் கேலியாக பதில் சொன்னார்கள்.
சிலர்
கலாட்டாவும் செய்தனர். பெண் வேடத்துக்காக தினமும் 5 மணி நேரம் மேக்கப் போட்டேன். ‘ரெமோ’ முழு நகைச்சுவை படமாக இல்லாமல் காதலும் இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்த சில
விஷயங்களும் இருக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட நடிகர்கள் படங்களுக்கு
தனிப்பட்ட முறையில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனது படங்களுக்கு தற்போது கிடைத்துள்ள
வரவேற்பை சிறப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.
காக்கி சட்டை,
மான் கராத்தே படங்கள்
நன்றாக வியாபாரம் ஆனது. ரஜினி முருகன் நல்ல லாபம் பார்த்தது. தவறான படங்களை தேர்வு
செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ரசிகர்களும் நல்ல படங்களை மட்டுமே வரவேற்பார்கள்.
அடுத்து நகைச்சுவையை குறைத்து அதிரடியான படங்களில் நடிக்க இருக்கிறேன்.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

Post a Comment