ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதிய கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார். அவருடைய தேதிக்காக காத்திருக்கிறோம். அது முடிவாகிவிட்டதும் படப்படிப்பை தொடங்கிவிடுவோம் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.


ரசூல் பூக்குட்டி ஸ்லம் டாக் மில்லினியர்படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். இப்படத்தை தொடர்ந்து இந்தியில் ரா ஒன்படத்துக்கு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். தற்போது கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.படத்துக்கும் இவர்தான் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

Post a Comment

 
Top