தனுஷ் நடிப்பில்
உருவாகியிருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.
இதைத்தொடர்ந்து ‘வடசென்னை’,
‘எனை நோக்கி பாயும் தோட்டா’
ஆகிய படங்களிலும் நடித்து
வருகிறார். இந்நிலையில், ‘பவர் பாண்டி’
என்ற படத்தை தயாரித்து,
இயக்கியும் வருகிறார்.
இப்படத்தில் ராஜ்கிரண்
முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் முக்கியமான
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டண்ட் கலைஞர்
பற்றிய அதிரடியான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணின் சிறு வயது
கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். இதில் அவரது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வரை வருமாம். இதில், தனுஷ் ஜோடியாக நடிக்க மடோனா செபஸ்டியான்
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மலையாளத்து வரவான
மடோனா செபஸ்டியான் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படம் மூலம்
பிரபலமானவர். தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தார். தற்போது ‘பவர் பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார்.

Post a Comment