ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது.

ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே, அடில் ஹூசைன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியாகி திரும்பி இருப்பதால் அவரும், ஏமி ஜாக்சனும் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து "நவம்பர் 20ம் தேதி பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட தீர்மானித்திருக்கிறோம். படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகள் முடிவுப் பெறுவதைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட இருக்கிறது லைக்கா நிறுவனம்.


Post a Comment

 
Top