சுந்தர்.சி.
மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அதிகாரப்பூர்வ
தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிப்பதற்கு மகேஷ் பாபு, ஜெயம் ரவி ஆகியோர் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் நடிகர்
ஆர்யாவும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சரித்திர
பின்னணியில் உருவாகும் இப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
இசையமைக்கிறார். கமலக்கண்ணன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். இவர்
ஏற்கெனவே சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படத்திற்கு
விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளார். சதீப் சட்டார்ஜி ஒளிப்பதிவு
செய்கிறார்.
இப்படத்தில்
முதலில் நடிக்க விஜய், சூர்யா
ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். நீண்ட நாட்கள் கால்ஷீட் கேட்டதால்
இருவரும் இப்படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment