பரதன்
இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட
பலர் நடித்து வரும் 'பைரவா' படத்தின்
படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த படப்பிடிப்பு
முடிந்து, பொங்கல் 2017க்கு வெளியிட படக்குழு முடிவு
செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு
நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத்
தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள்
ஒதுக்கியிருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு ஜனவரி 2017 இறுதியில்
தொடங்கவிருக்கிறது.
இதற்காக பல்வேறு
இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்கள். இறுதியாக அட்லீ கூறிய கதை விஜய் மற்றும்
தயாரிப்பு தரப்பு இருவருக்கும் பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அட்லீ
இயக்குவது உறுதியாகி இருக்கிறது.
'பைரவா' படத்தின் பணிகள்
அனைத்தும் முடிந்தவுடன், அட்லீ படம் குறித்து அறிவிக்க திட்டமிட்டு
இருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு
நடைபெற்று வருகிறது.

Post a Comment