ரஜினிகாந்த் இளைய
மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாக தனது ட்விட்டர்
பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இளைய
மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘கோச் சடையான்' படத்தின் மூலம்
இயக்குநராக அறிமுகமானார். அவருக்கும் தொழிலதிபர் அஸ் வினுக்கும் 2010-ம் ஆண்டு
திரு மணம் நடைபெற்றது. இருவருக் கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில
நாட்களாக செளந் தர்யா ரஜினிகாந்த் - அஸ்வின் இருவருக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து ரஜினி காந்த் குடும்பத்தில் இருந்து யாருமே கருத்து
தெரிவிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் செளந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது திருமண முறிவு குறித்து வெளியாகி
இருக்கும் செய்தி உண்மைதான். ஒராண் டுக்கும் மேலாக பிரிந்துதான் இருக்கிறோம்.
விவாகரத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது" என்று
தெரிவித்திருக்கிறார்.

Post a Comment