இந்திய பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும், தங்களுடைய ஸ்மார்ட் போனில், இணைய இணைப்பு எதுவுமின்றி, பேஸ்புக் தளத்திற்குச் செல்லலாம்.




 இதற்கு *325# என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதும். இந்த ஏற்பாட்டினை Fonetwish
என்ற சேவையுடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களே இதனைப் பயன்படுத்தி வருகின்றன. ஏர்டெல், டாடா டொகோமோ, ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய இந்திய மொபைல் சேவை நிறுவனங்கள் தற்போது இந்த சேவைக்கான வழியை அமைத்துத் தந்துள்ளன.

Fonetwish என்பது, இணைய இணைப்பின்றி, பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சாப்ட்வேர் தீர்வாகும். Fonetwish என்ற சேவை, USSD (Unstructured Supplementary Data) என்பதன் அடிப்படையில் இயங்குகிறது. இணைய டேட்டா திட்டம் எதுவுமின்றி மொபைல் சாதனங்களை இயக்கும் செயலி இது. சிங்கப்பூரில் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் U2opia Mobile என்னும் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள சேவை செயலி இது. இதன் அலுவலகம் இந்தியாவிலும் உள்ளது. இந்தியாவில், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா என்னும் நிறுவனம் இதன் சேவையினைப் பெருந்தொகை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தத் தருகிறது.

USSD (Unstructured Supplementary Data) என்பது, மொபைல் போன் (ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்) ஒன்றுக்கும், நெட்வொர்க்கில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றுக்கும் இடையே டெக்ஸ்ட் வழி தகவல்களை அனுப்பக் கூடிய உலகளாவிய இயக்க முறைமை ஆகும். இதன் வழி தான் முன் கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ரோமிங் வழிமுறைகள் இயக்கப்படுகின்றன. மொபைல் வழி நாம் மேற்கொள்ளும் 'அரட்டைகள்' (Chatting) அனைத்தும் இந்த தொழில் நுட்பம் தான் சாத்தியப்படுத்துகிறது.

இது ஏறத்தாழ எஸ்.எம்.எஸ். அனுப்பும் சிஸ்டம் போல இருந்தாலும், அந்த நேரத்தில் மட்டுமே இயங்கும். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டால், அனுப்பப்படும் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப்நிலையில் இருந்தாலும், இயக்கமே இல்லாத நிலையில் இருந்தாலும், அதன் இயக்கம் தொடங்கும் வரை, சர்வரில் வைக்கப்பட்டு, இயக்கம் தொடங்கியவுடன் அனுப்பப்படும். யு.எஸ்.எஸ்.டி. தொழில் நுட்பம், ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப ஆவணங்களில், GSM 02.90 மற்றும் GSM 03.90. என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பன்னாட்டளவில் 30 கோடிக்கும் மேலானவர்கள், Fonetwish சேவையினைப் பெற்று வருகின்றனர். இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயனாளர்கள் உள்ளனர்.

இதனைப் பயன்படுத்த, மேலே சொல்லப்பட்ட இந்திய மொபைல் சேவை நிறுவனங்களின் சேவை பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் இருக்க வேண்டும். அவற்றில் *325# என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். பின்னர், கிடைக்கும் திரையில், பேஸ்புக் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளீடு செய்திடல் வேண்டும். அதன் பின், உங்களுக்கு, உங்களின் பேஸ்புக் தளம் பயன்படுத்த கிடைக்கும்.


உங்கள் பக்கத்தில் என்ன என்ன சேவைகளைப் பயன்படுத்தலாம். இலவசமாக, உங்கள் ஸ்டேட்டஸ் தகவலை அப்டேட் செய்திடலாம். செய்திகளை (News Feed) வாசிக்கலாம். நோட்டிபிகேஷன்களைக் காணலாம். நண்பர்களுக்கு செய்தி அனுப்பலாம். மெசேஜ் அனுப்பலாம், பெறலாம். நண்பர்களின் பிறந்த நாட்கள் குறித்த தகவல்களைக் காணலாம். ஆனால், நோட்டிபிகேஷன்களை அமைக்க, நண்பர்களை இணைக்க நாள் ஒன்றுக்கு, அளவற்ற நேரத்திற்கு பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்த, ரூ.1 செலுத்த வேண்டும்.

நன்றி : முகநூல் பகிர்வு

Post a Comment

 
Top