காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'குற்றமே தண்டனை' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இரண்டுமே செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.





'குற்றமே தண்டனை' படத்தின் வெளியீட்டுக்கு சரியான தேதியை தேர்வு செய்ய ஆலோசனை செய்து வருகிறது படக்குழு. 'ஆண்டவன் கட்டளை' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் கதை விவாதத்தை முடித்து தயாராகி விட்டார் மணிகண்டன். அப்படத்துக்கு 'கடைசி விவசாயி' என பெயரிட்டு இருக்கிறார்கள். இப்படத்துக்காக 70 வயதான ஒரு முதியவரை நாயகனாக நடிக்க வைக்க இருக்கிறார் மணிகண்டன். இதற்காக புதிய முகம் ஒருவரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிகண்டன்.


Post a Comment

 
Top