சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படம், ‘காஞ்சனா 2’. படம் பற்றி அவர் கூறியதாவது:இது வழக்கமான பேய்
படமாக இருக்காது. காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து மகிழும் வகையில், ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது. கண்டிப்பாக
ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டமாக அமையும். கோவை சரளா மற்றும் அவரது கோஷ்டியின்
காமெடி கலாட்டா ஹைலைட்டாக இருக்கும். கதையை மீறாத கிராபிக்ஸ் காட்சிகள் பரவசம்
ஏற்படுத்தும். இதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகியுள்ளது.
‘காஞ்சனா’ படத்தின் சாயல் இதில் இருக்காது. அதைவிட கதையும், காட்சிகளும், சண்டைக் காட்சி அமைப்புகளும் புதுமையாக இருக்கும்.
வில்லனும், நானும் மோதும் ஒரு சண்டைக்
காட்சி பல நாட்கள் படமாக்கப்பட்டது. இதுவரை எந்தப் படத்திலும் இதுபோல் ஒரு சண்டை
இடம்பெறவில்லை. டாப்சி ஹீரோயின். இன்னொரு ஹீரோயின் தோன்றும் காட்சி, யாரும் எதிர்பாராத சஸ்பென்சாக இருக்கும். பாடல்
காட்சிகளுக்கு பிரமாண்டமான செட்டுகள் போடப்பட்டுள்ளது. இம்மாதம் படம் ரிலீசாகிறது.

Post a Comment