மால்வேர் எனப்படும், கேடு விளைவிக்கும் மென்பொருட்கள் இணையத்தின் மூலம் கணினிகளை தாக்குவதுண்டு. இது இந்தியாவில் அதிகம் நிகழும் நகர்களின் பட்டியலை எப்-செக்யூர் லேப்ஸ் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி டில்லி, ஐதராபாத், சென்னை மற்றும் சண்டிகர் ஆகிய நகர்கள் அந்த வரிசைப்படி முன்னணி வகிக்கின்றன. ஆண்ட்ராய்ட் மொபைல் இணையத்தில், மும்பை, டில்லி, சண்டிகர், சென்னை, குர்காவோன் ஆகிய நகர்கள் மால்வேர் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் நகர்களாக இருக்கின்றன.


பயனாளிகளின் இருப்பிடம், வங்கி தகவல்கள் போன்றவற்றை இந்த மால்வேர்கள் களவாடிச் செல்லக்கூடியவை. உரிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால், இந்த ஆபத்தை தவிர்க்கலாம்.

Post a Comment

 
Top