நடிப்பு மீது வரலட்சுமிக்கு இருந்த ஈடுபாட்டைக் கண்டு, அவரை இயக்குநர் பாலா வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்து இருக்கும் 1000-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'தாரை தப்பட்டை' படப்பிடிப்பில் வரலட்சுமியை வில்லன்கள் அடிப்பது போன்ற காட்சி ஒன்று இருக்கிறது. அக்காட்சியை படமாக்கிய போது, வில்லன்களோடு சண்டையிட்ட வரலட்சுமிக்கு கழுத்து பக்கத்தில் உள்ள எலும்பில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், வெளியே சொன்னால் எங்கு படப்பிடிப்பு நின்றுவிடுமோ என்று யாரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார் வரலட்சுமி.

மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன், வரலட்சுமி மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். இத்தகவலைத் தெரிந்த இயக்குநர் பாலா, வரலட்சுமிக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி, சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார் பாலா.
பாலாவின் பரிசு மற்றும் பாராட்டால் வரலட்சுமி மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

Post a Comment

 
Top