கடந்த சில நாட்களாக 27 பொதுத்
துறை வங்கிகளுக்குமான கிளார்க் பணியிட நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது.
ஐ.பி.பி.எஸ்., சார்பாக ஐ.ஓ.பி., தான்
இந்த நேர்முகத் தேர்வை நடத்துகிறது. ஒய்வு பெற்ற ஏ.ஜி.எம்., டி.ஜி.எம்., ஆகியோர் இந்த தேர்வுக் குழுவில் இடம் பெறுகின்றனர். தற்போது பணியாற்றி வரும் சில அதிகாரிகளும் இதில் இடம் பெறுகின்றனர். 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வோருக்கான உத்திகள் இதோ இங்கே...
* பொதுவாக நேர்முகத் தேர்வில் தனி நபர் சார்ந்த கேள்விகளும், நடப்புச் செய்திகள் மற்றும் பொது அறிவு, வங்கித் துறை சார்ந்த கேள்விகள் மற்றும் நீங்கள் படித்த படிப்பின் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப் படுகின்றன.
* சுய அறிமுகம், குடும்ப பின்னணி, உங்களது பொழுது போக்கு, பலம், பலவீனம், எதற்காக இந்த வேலைக்கு வருகிறீர்கள், இது கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், 5 ஆண்டுகள் பின்பு உங்களது வேலையில் உங்களைப் பற்றி எப்படி யோசிக்கிறீர்கள் போன்ற தனி நபர் கேள்விகள் கேட்கபடுகின்றன
* இப்போது வங்கித் தேர்வுகளில் இன்ஜினியரிங் படித்தவர்கள் அதிகமாக வருவதால் கம்யுனிகேஷன், வங்கிகள் தொடர்பான ஐ.டி. தொழில் நுட்பம், ஓ.எஸ்., சாப்ட்வேர் தொடர்பான கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.
* வங்கிகள் தொடர்பாக பல கேள்விகள் கடந்த சிலநாட்களாக மதுரை, கோயம்புத்தூர் போன்ற மையங்களில் கேட்கப்பட்டுள்ளன. சி.ஆர்.ஆர்., எஸ்.எல்.ஆர்., வங்கி விகிதம், ரெபோ விகிதம், பொதுத் துறை வங்கிகள் போன்ற கேள்விகள் கேட்கப் படுவதால் பாங்கிங் துறையில் நன்றாக தயாராகிக் கொள்வது முக்கியம்.
* நடப்புச் செய்திகளில், சமீபத்திய தேர்தல் நடந்த மாநிலங்கள், உலகக் கோப்பை கிரிக்கெட், உலக செஸ் போட்டிகள், டென்னிஸ் சாம்பியன்ஷிப், சார்க் மாநாடு, டில்லி தேர்தல் முடிவுகள் என நடப்பு செய்திகளில் கவனம் செலுத்தவும்.
நேர்முகத் தேர்வு தொடர்பாக தேவையில்லாமல் குழப்பி கொள்ளாமல் சரியாக திட்டமிட்டு தெளிவாக தயாராகுங்கள்.வாழ்த்துக்கள்.

Post a Comment